நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

அலிகார் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து சட்டத்தை அரசு ஏற்க மறுப்பது ஏன்?: உச்சநீதிமன்றம் கேள்வி

புது டெல்லி:

உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் பல்கலைக்கழகத்துக்கு சிறுபான்மை அந்தஸ்து வழங்கி 1981இல் நாடாளுமன்ற நிறைவேற்றிய சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு ஏற்க மறுப்பு ஏன்? என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

அலிகார் பல்கலைக்கழகம், மத்திய பல்கலைக்கழகமாக தரம் உயர்த்தப்பட்டதால் அதற்கு வழங்கப்பட்ட சிறுபான்மை அந்தஸ்து ரத்து செய்யப்படுவதாக 1967இல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும், 1981இல் நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வந்து மீண்டும் சிறுபான்மை அந்தஸ்து வழங்கியது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் 2006இல் அலகாபாத் உயர்நீதிமன்றம் சட்டத் திருத்தத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தொடுக்கப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த  உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான ஏழு நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது.

ஒன்றிய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவிடம் நீதிபதிகள் பல கேள்விகளை எழுப்பினர். அதில், நாடாளுமன்றம் நிலையான அமைப்பாக உள்ளது.

நாடாளுமன்றத்தின் நோக்கம் அழிக்க முடியாததாகும். அப்படிஇருக்கும்போது, நாடாளுமன்றம் 1981இல் நிறைவேற்றிய சட்டத் திருத்தத்தை எப்படி ஏற்க முடியாது என மத்திய அரசால் கூற முடியும்? நாடாளுமன்ற சட்டத்தை ஒன்றிய அரசு பின்பற்றியாக வேண்டும் என்று தெரிவித்தது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset