நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

எத்தனை வழக்குகள் போட்டாலும் அஞ்ச மாட்டேன்: ராகுல்

புது டெல்லி:

பாஜக ஆளும் மாநில அரசுகள் என் மீது எத்தனை வழக்குகள் போட்டாலும்  அஞ்சமாட்டேன் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

ராகுல் காந்தி மேற்கொண்டு வரும் இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம், அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டி நகருக்குள் நுழையவிடாமல் போலீஸôர் செவ்வாய்க்கிழமை தடுத்து நிறுத்தினர்.

இதனால் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போலீஸாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ராகுல் காந்தி மீது வன்முறையைத் தூண்டியதாக அஸ்ஸாம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

அஸ்ஸாமில் ஏழாவது நாள் நடைப்பயணத்தில் ராகுல் பேசுகையில், அதிக ஊழல் செய்யும் முதல்வராக அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா உள்ளார். பாஜக ஆளும் மாநிலங்கள் 25 வழக்குகளைப் பதிவு செய்யுங்கள், நான் அஞ்சப்போவதில்லை. பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பைக் கண்டு அஞ்சமாட்டேன்.

பிரதமர் மோடி, அவரது நெருங்கிய நண்பர் அதானிக்கு எதிராகப் பேசினேன். என் மீது வழக்குப்பதிவு செய்துஎம்.பி. பதவி பறிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றினர்.

அஸ்ஸாம் கலாசாரத்தை அழிக்க பாஜக - ஆர்எஸ்எஸ் முயற்சி செய்கின்றன என்றார்.
இதனிடையே, ராகுல் காந்திக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனகார்கே கடிதம் எழுதியுள்ளார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset