நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திடீர் அறிவிப்பால் 'இண்டியா'  கூட்டணிக்கு பின்னடைவு 

கொல்கத்தா: 

மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். 

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவை தொகுதிகளை பங்கிடுவது குறித்து திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ் கட்சி இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. 

இந்தியா கூட்டணியில் மேற்குவங்க மாநிலத்தில் தனித்து போட்டியிடுவதாக கம்யூனிஸ்ட் ஏற்கனவே அறிவித்து விட்ட நிலையில், திரிணாமுல், காங்கிரஸ் இடையே பிரச்னை எழுந்தது.

மேற்குவங்கத்தில் இரு தொகுதிகளை மட்டுமே ஒதுக்க மம்தா முடிவு செய்த நிலையில் அதை ஏற்க காங்கிரஸ் மறுப்பு தெரிவித்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் தனித்துப் போட்டியிடப் போவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார். 

இது குறித்து பேசிய அவர்; மேற்குவங்க மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணி வைக்காது. மக்களவை தேர்தல் முடிவுக்கு பிறகு கூட்டணி தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படும்.

மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் கட்சி நடத்தஉள்ள பேரணி குறித்து தமக்கு தகவல் தரவில்லை என்றும் மம்தா புகார் தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் திரிணாமுல் காங்கிரசும் இடம் பெற்றுள்ளது. 

மரியாதை நிமித்தமாகவாவது மேற்கு வங்கத்தில் யாத்திரை மேற்கொள்ளுவது பற்றி காங்கிரஸ் தெரிவித்திருக்க வேண்டும். மரியாதைக்காகவாவது “நான் வருகிறேன் சகோதரி” என ராகுல் கூறியிருக்க வேண்டும். ராகுல் காந்தியின் நீதி யாத்திரையிலும் பங்கேற்கப் போவதில்லை என்று கூறினார்.

மம்தாவின் அறிவிப்பால் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கு மேற்குவங்க மாநிலத்தில் பின்னடைவு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset