நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

ஆசியக் கிண்ணம்: சிரியா புதிய சாதனை

டோஹா:

ஆசியக் கிண்ண கால்பந்துப் போட்டியில் சுற்று 16க்கு முன்னேறி சிரியா அணியினர் சாதனைப் படைத்தனர்.

அல் பாயட் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் சிரியா அணியினர் இந்தியா அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிரியா அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

சிரியா அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 76ஆவது நிமிடத்தில் ஓமார் கிரிபின் அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து சிரியா அணியினர் சுற்று 16க்கு முன்னேறி உள்ளனர்.

மற்றொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியினர் 1-1 என்ற கோல் கணக்கில் உஸ்பெகிஸ்தான் அணியுடன் சமநிலை கண்டனர்.

மற்ற ஆட்டங்களில் ஈரான், பாலஸ்தீன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset