நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ராமர் கோயிலில் பக்தர்களின் கட்டுக்கடங்காத கூட்டம்: நெரிசலில் சிக்கி பலர் காயம் 

அயோத்தி:

உத்தர பிரதேச மாநிலம், அயோத்தி ராமஜென்மபூமியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபாலராமா் சிலை பிராணப் பிரதிஷ்டை செய்யப்பட்டு இன்று முதல் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

ராமர் கோயிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட முதல் நாளிலேயே கட்டுக்கடங்காத கூட்டம் கோயிலுக்குள் நுழைந்ததால், கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. பலர் நெரிசலில் சிக்கி காயமடைந்தனர் 

இன்று அதிகாலை 3 மணி முதலே, கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் குவியத் தொடங்கினர். முதல் தரிசனத்தை காண வேண்டும் என்ற உந்துதலால் ஆயிரக்கணக்கானோர் இன்று காலையிலேயே கோயிலுக்குள் குவிந்ததால், அங்கு நெரிசல் ஏற்பட்டது.

இந்த அளவுக்குக் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் திணறினர். நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர பாதுகாப்புப் படையினர் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

கோயில் முழுக்க பக்தர்கள் கூட்டம் நிரம்பி உள்ளதால், வெளியே செல்லவும், பாதுகாப்புப் படையினர் உள்ளே நுழையவும் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற மங்கள நிகழ்வில், 51 அங்குல உயர பாலராமா் சிலை கோயில் கருவறையில் நண்பகல் 12.30 மணியளவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset