நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மேலும் அதிகமான நீதிபதிகளை நியமிக்க வேண்டும்: வழக்கறிஞர்கள் வலியுறுத்து 

பெட்டாலிங் ஜெயா: 

மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிக நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று வழக்கறிஞர் ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

சிவில், கிரிமினல் வழக்குகளுக்குத் தலைமை தாங்கக்கூடிய நீதிபதிகள் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட வேண்டும் என்றும் வழக்கறிஞர் ஏ. ஸ்ரீமுருகன் கூறினார்.

வழக்கறிஞர்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க விரும்பம் கொள்கின்றனர். 

தற்போது பணியாற்றும் 27 மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளும் அதிக பணிச்சுமையில் உள்ளனர் என்பது வழக்கறிஞர் சமூகத்தின் பொதுவான கருத்தாகவுள்ளது. 

கூட்டரசு அரசியலமைப்பு 32 மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்க அனுமதிக்கிறது. ஆனால் பல காலியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 

மலேசியாவில் வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக ஸ்ரீமுருகன் கூறினார். மக்கள் தொகை பெருக்கத்திற்கு இணையாக குற்றங்களும் அதிகரித்து வருகின்றன.

மற்றொரு வழக்கறிஞர் ரஃபீக் ரஷீத் அலி, மேல்முறையீட்டு வழக்குகளைக் கையாள்வதில் நீதிபதிக்கு அதிக சுமை இருப்பதாகவும், எழுத்துப்பூர்வத் தீர்ப்பை வழங்குவதற்கு குறுகியக் கால அவகாசம் இருப்பதாகவும் கூறினார்.

நீதிமன்ற நடைமுறை அறிவுறுத்தல்களின்படி, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் கூட்டரசு நீதிமன்றத்திற்கு மேல்முறையீட்டு அறிவிப்பைச் சமர்ப்பித்த நாளிலிருந்து எட்டு வாரங்களுக்குள் தங்கள் முடிவிற்கான எழுத்துப்பூர்வக் காரணங்களை வழங்க வேண்டும்.

ஊழல், பாலியல் மற்றும் வன்முறை குற்றங்கள் போன்ற விஷயங்களில் கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கு வழிகாட்டும் வகையில், பொதுநலன் சம்பந்தப்பட்ட வழக்குகளிலும் நீதிபதிகள் தீர்ப்பு எழுத வேண்டும் என்றார் அவர்.

ஆறு மாதங்களுக்கு கீழ் நீதிமன்றங்களிலிருந்து வரும் மேல்முறையீடுகளை மட்டுமே விசாரிக்கும் நிபுணர் குழுவை அறிமுகப்படுத்துவதே ஒரு தீர்வு என்று ரஃபீக் கூறினார்.

இது அவர்களுக்கு அனுபவத்தையும், மாஜிஸ்திரேட் மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தின் மேல்முறையீடுகளில் தங்கள் தீர்ப்புக்கான காரணங்களை முன்வைப்பதற்கான நேரத்தையும் வழங்கும்," என்று அவர் கூறினார்.

வழக்கறிஞர் ஷாருதீன் முகமது, நீதிபதிகள் தங்கள் தீர்ப்புகளை எழுதுவதற்கு ஆராய்ச்சி அதிகாரிகளை அரசு நியமிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset