நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

புத்ராஜெயா லாபுவானில் அடிப்படை உள்கட்டமைப்பு பிரச்சனைகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்துகிறது: ஸாலேஹா முஸ்தபா

பெட்டாலிங் ஜெயா: 

லாபுவானில் அடிப்படை உள்கட்டமைப்பு பிரச்சனைகளை தீர்ப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தும் என்று கூட்டரசுப் பிரதேசப் பிரதமர் துறை அமைச்சர் டாக்டர் ஸாலேஹா முஸ்தபா தெரிவித்தார்.

லாபுவானில் அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது உள்ளூர் பொருளாதாரத்தை ஊக்குவிக்கவும் முதலீட்டை ஈர்க்கவும் உதவும் என்று அவர் கூறினார். 

இன்று துணைப் பிரதமர் ஃபடிலா யுசோப் லாபுவானிற்கு வருகை புரிந்தது அரசாங்கத்தின் அர்ப்பணிப்பைத் தெளிவாகக் காட்டுகின்றது டாக்டர் ஸாலேஹா முஸ்தபா தெரிவித்தார்.

செப்டம்பரில், செனட்டர் அனிஃபா அமான், லாபுவானிலுள்ள மக்கள் தண்ணீர் மற்றும் மின்சாரம் போன்ற அடிப்படை அத்தியாவசிய வசதிகளின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர் என்று செனட்டர் அனிஃபா அமான் கூறினார். 

இவ்வாறான பிரச்சனைகளைச் சரியாகக் கையாளவில்லையென்றால், லாபுவானுக்கு வெளியில் தொழில்முனைவோரை ஈர்த்து தொழில்களை நிறுவுவதும், லாபுவானை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு விருப்பமான தேர்வாக மாற்றுவதும் கடினமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

சரியான உள்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் இல்லாமல், லாபுவானிலுள்ள மக்கள் வறுமையிலிருந்து மீள்வது சாத்தியமில்லை என்றும் அனிஃபா கூறினார்.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset