நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஆப்கானிஸ்தானில் விபத்தான விமானம் ரஷ்யாவுக்கு சொந்தமானதா?

மாஸ்கோ:

ஆப்கானிஸ்தானில் விபத்தான விமானம் ரஷ்யாவுக்கு சொந்தமானதா என்ற கேள்விகள் பரவலாக எழுந்துள்ளது.

விமான விபத்து குறித்து  ஆப்கானிஸ்தான்  காவல்துறைக்கு புகார் கிடைத்தது.

இந்நிலையில்  6 பேர் இருந்ததாக நம்பப்படும்  ரஷ்ய விமானம் ஒன்று காணாமற்போனதாக ரஷ்ய விமானத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

நேற்றிரவு  விபத்து ஏற்பட்டதாகப் புகார் செய்யப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தான் ஆகாய வெளியில் விமானம் சென்று கொண்டிருந்தபோது அது காணாமற்போனதாக அதிகாரிகள் கூறினர்.

அந்த விமானம் இந்தியாவிலிருந்து மாஸ்கோவுக்குச் சென்று கொண்டிருந்ததாக அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆப்கானிஸ்தானின் வடக்குப் பகுதியில் இருக்கும் பதக்-ஷான்  எனும் மலைப்பகுதியில் விபத்து நேர்ந்ததாகக் காவல்துறை குறிப்பிட்டது.

அந்தப் பகுதி நகரத்திலிருந்து வெகுதொலைவில் உள்ளது.

 மீட்புக்குழுவினர் அங்கு சென்றடைய சுமார் 12 மணிநேரம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.

விமானத்தின் விவரங்கள், விபத்துக்கான காரணம், பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் ஆகியவை உறுதியாகத் தெரியவில்லை.

விபத்தில் சிக்கிய விமானம்  இந்திய விமானமே இல்லை என்று இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் குறிப்பிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset