நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

16 வயதுக்கு உட்பட்டவர்களை பயிற்சி மையங்களில் சேர்க்கக் கூடாது: தற்கொலைகளைத் தடுக்க புதிய விதிமுறை

புது டெல்லி:

தவறான வாக்குறுதிகளைக் கூறி 16 வயதுக்குட்பட்டோரை பயிற்சி மையங்களில் சேர்க்கக் கூடாது என ஒன்றிய கல்வி அமைச்சகம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

மாணவர்கள் தற்கொலை, முறையான கட்டமைப்பு வசதிகள் இல்லாமை, தீ விபத்துகள் என பயிற்சி மையங்கள் குறித்து புகார் அளிக்கப்பட்டன. இதையடுத்து தனியார் பயிற்சி மையங்களில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கும் நோக்கிலான புதிய விதிமுறைகளை ஒன்றிய கல்வி அமைச்சகம் வெளியிட்டது.

அதில், பட்டப்படிப்புக்கும் குறைவாக படித்துள்ள நபர்களை பயிற்சி மையங்களில் ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது. 

நுழைவுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண், ரேங்க் பெற வைப்பது போன்ற தவறான வாக்குறுதிகளை அளித்து பெற்றோர்களை திசைதிருப்பி மாணவர் சேர்க்கையில் ஈடுபடக் கூடாது. 

16 வயதுக்குட்பட்டோரை பயிற்சி மையங்களில் சேர்க்கக் கூடாது.  

அரசின் புதிய விதிமுறைகளை பின்பற்றாத பயிற்சி மையங்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் அல்லது பயிற்சி மையத்தின் உரிமம் ரத்து செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset