நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் சிந்தனைகள்

By
|
பகிர்

மாபெரும் ஜிஹாத்துக்குத் தயாரா? எது ஜிஹாத்? - வெள்ளிச் சிந்தனை

வாளை ஏந்திக்கொண்டு சத்தியத்துக்காக உடல், உயிர், உடைமை என எதனைக் குறித்தும் கவலைப்படாமல் போராடுவதுதான் ஜிஹாத். 

ஆனால், ஆயுதங்களைக் கொண்டு போர்க்களத்தில் போரிடுகின்ற தீர்மானத்தை எடுக்கின்ற உரிமையோ, அதிகாரமோ எந்தவொரு சாமான்ய முஸ்லிமுக்கோ, எந்தவொரு ஜமாஅத்துக்கோ, எந்தவொரு அமைப்புக்கோ, எந்தவொரு கட்சிக்கோ இல்லை. அறவே இல்லை.

ஆயுதங்களை ஏந்திக் கொண்டு போரிடுகின்ற முடிவை எடுக்கின்ற அதிகாரம் இஸ்லாமிய அரசாங்கத்துக்கு மட்டுமே உண்டு. 

எனவேஇன்று ஜிஹாதிகளாய் ஊடகத்தினரால் ஊதிப் பெரிதாக்கிக் காட்டப்படுகின்ற ஐஎஸ் ஜிஹாதிகள் என்கிற அமெரிக்க, இஸ்ரேலியக் கைகூலிகளால் நடத்தப்படுவது ஜிஹாதே கிடையாது. அவர்கள் போலிகள்

அதே சமயம் இன்னொன்றை குர்ஆன் ‘மாபெரும் ஜிஹாத்’ என்று அறிவிக்கின்றது. 

அதுதான் சித்தாந்தத் தளங்களில், அறிவுக் களங்களில் குர்ஆனை ஏந்திக் கொண்டு போராடுவது ஆகும்.

குர்ஆனின் செய்தியைப் பரப்பி, குர்ஆனின் செய்தியை விளக்கி, குர்ஆனின் செய்தியின்படி வாழ்ந்துக் காட்டி, குர்ஆனின் போதனைகளின் படி அனைத்து விவகாரங்களிலும் தீர்வளிக்கின்ற அறப்போராட்டம்தான் மாபெரும் ஜிஹாத் ஆகும். ஒவ்வொரு தனிமனிதர் மீதும் இது கடமையாகும்

இவ்வாறு குர்ஆனின் செய்தியைப் புரிந்துக்கொண்டு, குர்ஆனின்படி வாழ்ந்து, குர்ஆனின் பக்கம் மக்களை அழைக்கின்ற இந்த போராட்டத்தைத்தான் இஸ்லாம் அதிகமாக ஊக்குவிக்கின்றது. 

இதன் விளைவாகத்தான் சித்தாந்த, அறிவார்ந்த, ஆன்மிக அடிப்படைகளில் இஸ்லாமிய சமூகத்தைக் கட்டியெழுப்ப முடியும். 

ஆயுதம் ஏந்திப் போரிடுகின்ற போது நிலப்பகுதிகளும் மனித உடல்களும் வெற்றி கொள்ளப்படலாம். 

ஆனால் குர்ஆனின் கருத்துகளைக் கொண்டு ஜிஹாத் செய்கின்ற போது மனங்களும், இதயங்களும், ஆன்மாக்களும், ஒட்டுமொத்த தலைமுறைகளும் வெற்றி கொள்ளப்படுகின்றன.
 
இதனால்தான் இந்த ஜிஹாதை *‘மாபெரும் ஜிஹாத்’ (ஜிஹாதன் கபீரா)* என்று அறிவிக்கின்றது. 

‘இந்தக் குர்ஆனைக் கொண்டு அவர்களுடன் பெரும் ஜிஹாதில் - கடுமையான போராட்டத்தில் ஈடுபடுங்கள்’ (திருக்குர்ஆன்: அத்தியாயம் 25 அல்ஃபுர்கான் 52)

இந்த மாபெரும் ஜிஹாதைக் குறித்து நம்மில் எத்தனை பேர் அறிந்திருக்கின்றோம்?

இதில் நம்முடைய பங்களிப்பு என்ன?

இதற்காக நாம் எந்த அளவுக்கு ஆயத்தமாக இருக்கின்றோம்?

குர்ஆனை எந்த அளவுக்குப் புரிந்து வைத்திருக்கின்றோம்?

நம்முடைய வாழ்வில் குர்ஆனை எந்த அளவுக்குக் கடைப்பிடிக்கின்றோம்?

- அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்

தொடர்புடைய செய்திகள்

+ - reset