நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஜொகூர் - சிங்கப்பூர் ரயில் கட்டணம் பின்னர் முடிவு செய்யப்படும்: அந்தோனி லோக்

ஜொகூர்பாரு:

சிங்கப்பூரையும் ஜொகூரையும் இணைக்கும் புதிய ரயில் இணைப்புத் திட்டத்தின் கட்டணம் போட்டித் திறன்மிக்கதாக இருக்கும். அ

ந்தத் திட்டம் நிறைவடையும்போது கட்டணம் பற்றி முடிவு செய்யப்படும் என்று  போக்குவரத்து துறை  அமைச்சர் அந்தோனி லோக் கூறினார்.

சிங்கப்பூரின் தற்காலிக போக்குவரத்து அமைச்சரான சீ ஹொங் டாட், 
கட்டணங்களை நிர்ணயிப்பதில் ஜொகூர்பாரு - சிங்கப்பூர் விரைவு ரயில் சேவையை நடத்தும் ஆர்டிஎஸ், தேவை உள்ளிட்ட அம்சங்களை கருத்தில் கொள்ளும் என்றார்.

ஆர்டிஎஸ் ரயில் சேவை, சிங்கப்பூரின் ரயில் சேவை நிறுவனமான எஸ்எம்ஆர்டி, மலேசிய பொதுப் போக்குவரத்து நிறுவனமான பிரசாரானா ஆகியவற்றுக்கு இடையிலான கூட்டு முயற்சியாகும்.

ஆர்டிஎஸ் ரயில் தொடர்புக்கான கட்டணத்தை வர்த்தக ரீதியில் நிர்ணயிக்க இரு தரப்பும் ஒப்புக் கொண்டுள்ளன என்று   சீ ஹொங் டாட் கூறினார்.

ரயில் இணைப்புத் திட்ட கட்டுமானத்தின் முக்கிய மைல்கல் அடைந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசினார்.

ஆர்டிஎஸ் ரயில் சேவை 2026ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset