நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

அரசாங்கத்தை கவிழ்க்க 1 பில்லியன் ரிங்கிட் நிதி: போலீஸ் விசாரிக்க வேண்டும்

கோலாலம்பூர்:

அரசாங்கத்தை கவிழ்க்க தேசியக் கூட்டணி 1 பில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

இந்த குற்றச்சாட்டுகளை போலீஸ் உடனடியாக விசாரிக்க வேண்டும் என்று பிரதமரின் அரசியல் செயலாளர் அஸ்மான் அபிடின் கூறினார்.

பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாரின் ஒற்றுமை அரசாங்கத்தை வீழ்த்துவதற்கான முயற்சிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்கு லங்கா துபாய் விவகாரம் நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் தேசியக் கூட்டணி 1 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு லஞ்சம் கொடுக்கும் நோக்கில் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக பிரதமருக்கான ஆதரவை மீட்டுக் கொள்வதுடன் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியாகவுக் இது உள்ளது.

இக்குற்றச்சாட்டுகள் உண்மை என்றால் போலீஸ்படை உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

இதன் மூலம் பல உண்மைகள் வெளிவரும் என்று அவர் கூறினார்.

கடும் சிரமத்தில் இருக்கும் மக்களை காப்பாற்றுவதுடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அரசாங்கம் கடுமையாக போராடி வருகிறது.

இந்நேரத்தில் இதுபோன்ற சதித் திட்டங்கள் நாட்டிற்கு தான் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அஸ்மான் அபிடின் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset