நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

பண்டோரா பேப்பரில் குறிப்பிடப்பட்டுள்ள 9 நபர்களையும் எம்.ஏ.சி.சி விசாரிக்க வேண்டும் 

கோலாலம்பூர்: 

பண்டோரா பேப்பரில் குறிப்பிடப்பட்டுள்ள 9 நபர்களையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று தூய்மை மலேசிய இயக்கமான ஜி.எம்.எம் பி எம்.ஏ.சி.சி அலுவலகத்தில் மகஜரைச் சமர்ப்பித்தது. 

ஒன்பது நபர்களில் துணைப்பிரதமர் அஹ்மத் ஸாஹித் ஹமிடி, அனைத்துலக வாணிப, தொழிற்துறை அமைச்சர் தெங்கு டத்தோஶ்ரீ ஸப்ருல் மற்றும் இதரவர்களையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் முழுமையாக விசாரிக்க வேண்டும். 

சட்டத்திட்டங்கள் என்பது மலேசியர்களாகிய அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். ஒரு தலைபட்சமாக எந்தவொரு தரப்பும் செயல்பட கூடாது என்று இவ்வமைப்பின் துணைத்தலைவர் ஷாருல் எமா ரெனா கூறினார். 

பண்டோரா பேப்பர்ஸ் வாயிலாக துன் டாய்ம் ஊழல் புரிந்ததாக எம்.ஏ.சிசி விசாரணையைத் தொடங்கியது. அதேபோல மற்ற நபர்களை விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். 

மேலும், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஏன் ஊழல் வழக்குகளைத் தேர்ந்தெடுத்து விசாரணைகளை மேற்கொள்கிறது என்று அவர் வினா எழுப்பினார்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset