நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஜப்பானில் அடுத்த அதிர்ச்சி: தீப்பிடித்த விமானத்தில் 5 பேர் மரணம்

டோக்கியோ:

ஜப்பானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் ஹனேடா விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது, அங்கு நின்று இருந்த மற்றொரு கடலோர காவல்படை விமானம் மீது மோதி தீப்பிடித்தது. 

விமானத்தில் இருந்த 367 பயணிகள் உயிர் தப்பினர். 

அதே நேரத்தில் கடலோர காவல்படைக்கு சொந்தமான விமானத்தில் இருந்த 5 பேர் உயிரிழந்தனர்.

இதனை ஜப்பான் போக்குவரத்துத் துறை அமைச்சர் டெட்சுவோ சைதோ உறுதிப்படுத்தினார்.

ஜப்பான் விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏர்பஸ் ஏ350 விமானம் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்தது. 
இதனால், அதன் பாகங்கள் ஓடுபாதையில் சிதறி கிடக்கின்றன. 

விமானம் தீப்பிடித்ததற்கான காரணம் ஏதும் வெளியாகவில்லை. 

இருப்பினும், அந்த விமானம் தரையிறங்கும் போது, ஓடுபாதையில் நின்றிருந்த கடலோர காவல்படையின் விமானம் மீது மோதியதால் தீப்பிடித்து இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

விமானத்தில் இருந்த 367 பயணிகள் அனைவரும் பாதுகாப்புடன் வெளியேற்றப்பட்டனர். 

இருப்பினும் அவர்களுக்கு காயம் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை.

இது தொடர்பாக அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்ட வீடியோக்களில், விமானத்தின் ஜன்னல்கள் மற்றும் முன்பகுதியில் தீப்பிடித்த காட்சிகள் பதிவாகி உள்ளன. 

உடனடியாக தீயணைப்பு படை வீரர்கள், விமானத்தில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset