நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

புத்தாண்டின் முதல் நிலநடுக்கம் ஜப்பானைத் தாக்கியது: சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது

தோக்கியோ:

புத்தாண்டின் முதல் நாளான இன்று, ஜப்பானில் பெரிய பூகம்பத்திற்குப் பிறகு முதல் சுனாமி அலைகள் ஜப்பானைத் தாக்கியது.

ஆழிப்பேரலை மிக பிரம்மாண்டமான அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றன. 

ஜப்பானில் இன்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து முதல் சுனாமி அலைகள் ஜப்பானைத் தாக்கியது. 

ஜப்பான் கடலின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் சுனாமி ஏற்பட்டது.

மேலும் பெரிய அலை எதிர்பார்க்கப்படுகிறது என்று ஜப்பானின் செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜப்பான் கடலின் மேற்குக் கரையோரப் பகுதிகளில் சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் சுனாமி ஏற்பட்டது.

மேலும் பெரிய அலைகள் நிலப்பரப்பை தாக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இது தொடர்பாக ஜப்பானின் வானிலை ஆய்வு மையம், இஷிகாவா, நிகாடா, டோயாமா ஆகிய கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.

வானிலை ஏஜென்சியின் கணிப்பின்படி, இஷிகாவா மாகாணத்தில் உள்ள ஹசூ மாவட்டத்தில் அமைந்துள்ள நோட்டோ நகரத்தில் 5 மீட்டர் உயர சுனாமி எதிர்பார்க்கப்படுகிறது. 

2024ஆம் ஆண்டு முதல் நாளான இன்று 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் வடக்கு மத்திய ஜப்பானைத் தாக்கியது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset