நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

ஈரானில் நடந்த பலஸ்தீன மாநாட்டில் இலங்கை முஸ்லிம்  காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேற்கு நாடுகளின்  இரட்டை வேடம் குறித்து கவலை 

டெஹ்ரான்:

மேற்கு நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பதற்கான உரிமையை (R 2 P) பலஸ்தீனத்தைப் பொறுத்தவரை  பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலைமையிலேயே இருப்பதாக  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஈரானில் நடைபெற்ற பலஸ்தீனை மையப்படுத்தி பல நாடுகள் பங்குபற்றிய உயர்மட்ட ஆலோசனை (அரசியல்) மாநாட்டில் கவலை தெரிவித்திருக்கிறார்.

ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைநகர் தெஹ்ரானில் சனிக்கிழமை  நடைபெற்ற பலஸ்தீனம் தொடர்பான பன்னாட்டு உயர்மட்ட அரசியல் ஆலோசனை மாநாட்டில்,அந் நாட்டின் அழைப்பையேற்று, இலங்கை வாழ் முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்   பங்குபற்றி, பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் மேற்கொண்டுவரும் மிலேச்சத்தமான தாக்குதலை வன்மையாகக்  கண்டித்தும், நிரந்தர தீர்வுக்கான அவசியம் குறித்தும் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

பல நாடுகளில் இருந்து வெளி நாட்டு அமைச்சர்கள் சிலர் உட்படThink Tank என்றழைக்கப்படும் மூளைசாலிகள் பலரும் இதில் கலந்து கொண்டு நிலைமையை ஆராய்ந்தனர்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அங்கு ஆற்றிய உரையிலிருந்து ஒரு பகுதி வருமாறு:

பாலஸ்தீனுடைய நிலைமை மிகவும் கவலைக்கிடமானதாக இருக்கிறது. எந்தவொரு நாடும் அதன் புவிசார் அரசியல் (Geo-Political நிலைப்பாடுகள்  மீது  ஏனைய நாடுகள் எவையும்  தலையீடு செய்வதை விரும்புவதில்லை.

 அவ்வாறிருக்க, மேற்கு நாடுகளால் ஏற்படுத்தப்பட்ட பாதுகாப்பதற்கான உரிமையை(Right to Protect)  பயன்படுத்தி தென் சூடானிலும், சிரியாவிலும் வேறு நாடுகள் ஊடுருவின. அதன் உண்மையான நோக்கம் நிறைவேறியதாக இல்லை.ஆனால், பலஸ்தீனத்தை பொறுத்தவரை நாங்கள் அந்த விஷயத்தில் மிகவும் பலவீனமாக இருக்கிறோம் .

இந்த உரிமை(R 2 P) இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தில்  பயன்படுத்தவில்லை மேற்கு நாடுகளின்  இரட்டை வேடம் இதுதான் என்றார்.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset