நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

2024ஆம் ஆண்டை வரவேற்க சிங்கப்பூரில் வாணவேடிக்கை

சிங்கப்பூர்: 

2024ஆம் ஆண்டை வரவேற்க மக்கள் கழகம் 7 அக்கம்பக்க வட்டாரங்களில் வாணவேடிக்கைக்கு ஏற்பாடு செய்துள்ளது.

-- தெம்பனீஸ் (Our Tampines Hub Town Square)
-- பூன் லே (புளோக் 215 பூன் லே பிலேஸ்)
-- மார்சிலிங் (உட்லண்ட்ஸ் விளையாட்டு அரங்கம்)
-- நீ சூன் (யீஷுனில் உள்ள FutsalArena)
-- கியெட் ஹொங் (கியெட் ஹொங் square)
-- மெக்பர்சன் (மெக்பர்சன் சமூக மன்றத்திற்கு வெளியே)
-- மரீன் பரேட் (புளோக் 46 மரீன் பரேட் கிரசண்ட்)

ஆகிய இடங்களில் டிசம்பர் 31 நள்ளிரவு வாணவேடிக்கையைக் கண்டுகளிக்கலாம்.

ஆண்டு இறுதிக் கொண்டாட்டங்களை அனுசரிக்க சுமார் 28 சமூக நிகழ்ச்சிகளுக்குத் தீவெங்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாய் மக்கள் கழகம் தெரிவித்தது.

டிசம்பர் 30, 31ஆம் தேதிகளில் அவை நடைபெறும்.

அனைவரையும் உள்ளடக்கும் வகையில் நிகழ்ச்சிகள் அமையும் என்று நம்பப்படுகிறது.

செல்லப்பிராணிகளுக்கும் நடவடிக்கைகள் உள்ளன.

இந்தக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் சுமார் 70,000 குடியிருப்பாளர்களை ஒன்றுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதாரம்: மீடியா கார்ப்

தொடர்புடைய செய்திகள்

+ - reset