நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இது தாங்க கம்யூனிஸ்ட்களின் கேரளா: பெண்களுக்காக பெண்களே நடத்தும் தங்குவிடுதி

கொச்சின்: 

கேரளாவில் உள்ள கொச்சி மாநகராட்சியில்  பெண்களுக்காக பெண்களால் நடத்தப்படும் SHE தங்கு விடுதி (SHE LODGE) மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. 

இந்த விடுதி துவங்கப்பட்ட 9 மாதங்களிலேயே 24 லட்சம் வருமானம். 22,500 பேர் தங்கியுள்ளனர். 

ஒரு நாள் இரவு தங்குவதற்கு ரூ.100 மட்டுமே வாடகை. ஒரே நேரத்தில் 160 பேர் வரை தங்கலாம். Bathroom இணைப்புடன் கூடிய அறைகளும் Dormitory தன்மையிலான படுக்கை வசதிகளும் she விடுதியில் உள்ளன. இங்கு தங்குபவர்களுக்கு பத்து ரூபாய்க்கு உணவும் வழங்கப்படுகிறது. 

இந்த  விடுதியினையும் உணவகத்தையும் குடும்பஸ்ரீ நடத்துகிறது. சிசிடிவி கேமரா உள்ளிட்ட  வசதிகளும் இங்கு  உள்ளன. 

கொச்சி வரும் பெண்களுக்கு மிகவும் குறைந்த விலையிலான தங்குமிடம் மட்டுமல்ல SHE விடுதி, பாதுகாப்பான விடுதியும் கூட. 

கொச்சிக்கு வரும் பெண்கள் அழைக்க வேண்டிய SHE விடுதியின் எண்  95671 44489.

ஆதாரம்: மாத்ருபூமிநாளிதழ்

- புதுமடம் ஜாஃபர்

தொடர்புடைய செய்திகள்

+ - reset