நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

164 விமானங்கள் இயக்கப்படாமல் உள்ளன: ஜோதிராதித்யா சிந்தியா

புது டெல்லி:

இந்தியாவில் உள்ள 15 விமான நிலையங்களில் பல்வேறு பிரச்சனைகளால் 164 விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய  விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் நாடாளுமன்றத்தில் அளித்துள்ள பதிலில், தில்லி விமான நிலையத்தில் 64 விமானங்களும், பெங்களூருவில் 27 விமானங்களும், மும்பையில் 24 விமானங்களும், சென்னையில் 20 விமானங்களும்  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த விமானங்கள் இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட், கோ ஃபர்ஸ்ட், ஏர் இந்தியா, ஜூம் ஏர், அலையன்ஸ் ஏர் உள்ளிட்ட நிறுவனங்களுக்குச் சொந்தமானது.

164 விமானங்களில் 95 சதவீத விமானங்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டதற்கு, பிராட் மற்றும் விட்னி நிறுவனத் தயாரிப்பு என்ஜினில் ஏற்பட்ட கோளாறுகளே முக்கிய காரணமாக உள்ளது என்றார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset