நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஃபரூக் அப்துல்லாவுடன் மெஹபூபா முஃப்தி கூட்டணி: தனித்துவிடப்பட்ட பாஜக

ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தேர்தலில் ஃபரூக் அப்துல்லாவுடன் மெஹபூபா முஃப்தி கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளார். எதிரும் புதிருமாக இருந்த இவர்கள் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதால் பாஜக தனித்து விடப்பட்டுள்ளது.  

ஜம்மு-காஷ்மீரில் அடுத்த செப்டம்பருக்குள் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.

தேசிய மாநாட்டுக் கட்சியும், மக்கள் ஜனநாயகக் கட்சியும்  எதிரெதிர் துருவங்களாக இருந்தன. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகு இந்த இரு கட்சிகளும் இணக்கமாக செயல்பட்டு வருகின்றன.

இது அந்த மாநில அரசியலில் பெரும் திருப்பமாக கருதப்படுகிறது.

இந்நிலையில், பாஜக பொதுச் செயலர் அசோக் கெளல் கூறுகையில், ஜம்மு-காஷ்மீரில் எந்தக் கட்சியுடனும் தேர்தலுக்கு முன்பு கூட்டணி அமைக்காது. தேர்தலுக்குப் பிறகு தேவை ஏற்பட்டால் கூட்டணி வைக்கப்படும் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset