நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

செக் குடியரசின் பல்கலைக்கழக மாணவர், 14 பேரைச் சுட்டுக்கொலை

ப்ராக்:

செக் குடியரசில் உள்ள சார்ல்ஸ் (Charles) பல்கலைக்கழகத்தில் 24 வயது மாணவர் 14 பேரைச் சுட்டுக்கொன்றார். பின்னர் அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு மாண்டதாய் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 25 பேர் காயமடைந்தனர். அவர்களில் 10 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் செக் குடியரசில் நடந்த மிக மோசமான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவமாக அது கருதப்படுகிறது.

சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் சிலர் அந்த மாணவரின் சகாக்கள் என்று தெரிவிக்கப்பட்டது.

நாளை (23 டிசம்பர்) தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படவுள்ளது.

அரசாங்கக் கட்டடங்களில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.

காணாமற்போன மாணவர்களின் பெயர்ப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.


துப்பாக்கிச் சூட்டை நடத்துவதற்கு முன்பாக அந்த மாணவர் தமது தந்தையைச் சுட்டுக்கொன்றதாகக் காவல்துறை நம்புகிறது.

துப்பாக்கிச் சூட்டை அடுத்து அந்த நகரில் உள்ளவர்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியிருக்கிறது. ஆயுதங்கள் ஏந்திய காவல்துறை சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ளது.

சம்பவம் நடந்த இடத்துக்கு அருகில் 14ஆம் நூற்றாண்டின் சார்ல்ஸ் பாலம் உள்ளிட்ட முக்கிய சுற்றுலாத்தலங்கள் உள்ளன.

ஆதாரம் : AFP

தொடர்புடைய செய்திகள்

+ - reset