
செய்திகள் சிந்தனைகள்
தலைமை என்பது என்ன? - வெள்ளிச் சிந்தனை
மாற்றத்துக்கான தொலைநோக்கினைத்தான் தலைமை என்று சொல்வோம்.
தற்போதையை நிலைமையை மாற்றுவதற்கான கனவு கண்டு, கனவைக் காண்பித்து, அதனை நோக்கிச் செல்வதற்கான பாதையை வெளிச்சம் போட்டுக் காட்டி, அந்த வழியில் களம் இறங்கி, தொடர்ந்து முன்னேறிச் செல்வதற்கான ஊக்கத்தையும் உறுதியையும் தருவதற்குப் பெயர் தான் தலைமை.
என்னதான் சூழல்களும் நிகழ்வுகளும் பாதகமானவையாய் இருந்தாலும் அவற்றை நிதானத்தோடும் பொறுப்பு உணர்வோடு எதிர்கொண்டு தொலைநோக்கு திட்டத்துடன் காரியமாற்றுகின்ற பக்குவத்தை மக்கள் மத்தியில் உருவாக்குவதுதான் தலைமையின் முக்கியமான பணியாகும்.
சாமான்யர்களை உணர்வுப் பேரலைகளில் அடித்துச் செல்லப்பட்டு விடாமல் தடுத்து நிறுத்துவதும் தலைவர்களின் பொறுப்பாகும்.
மக்களின் கடிவாளம் அற்ற உணர்வுகளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பவர்களாக மாறிவிடாமல் அதற்குப் பதிலாக அவர்களைப் பயிற்றுவித்து, எப்படிப்பட்ட பாதகமான சூழலிலும் உணர்ச்சிவசப்படாமல், நிதானமாக, ஆற அமர யோசித்து, எல்லாக் கோணங்களிலும் சீர்தூக்கிப் பார்த்து, நீண்டக்கால நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு செயலாற்றுகின்ற வித்தையை மக்களுக்குக் கற்றுக் கொடுப்பதுதான் தலைமைக்கு அழகு.
இதற்காக வேண்டி கடுமையான தீர்மானங்களை எடுக்கவும் தயங்கக் கூடாது. மக்களின் அதிருப்தியை எதிர்கொள்வதற்கும் ஆயத்தமாக இருக்க வேண்டும்.
ஜனரஞ்சகமான (பாபுலிசம்) - மக்களுக்குப் பிடித்தமான வகையில் - செயலாற்றுவதும் மிகையான உணர்ச்சிவசப்படுகின்ற போக்கின் மற்றுமோர் வடிவமே.
மோசமான நிலைமைகளில் தலைமையும் பாபுலிச - ஜனரஞ்சகமான - செயல்பாடுகளுக்குப் பலியாவது மிகப் பெரும் நாசத்துக்கே வித்திடும்.
- சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி
தொடர்புடைய செய்திகள்
October 17, 2025, 7:18 am
குதிரைகள் மீது அல்லாஹ் ஏன் சத்தியம் செய்கின்றான்?: வெள்ளிச் சிந்தனை
September 26, 2025, 9:30 am
இறப்புக்கு மட்டுமா இன்னாலில்லாஹி? - பொருள் என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 19, 2025, 8:06 am
வெளவால் - இறைவனின் அற்புதப் படைப்பு: வெள்ளிச் சிந்தனை
September 12, 2025, 8:32 am
Pillars of Jupiter மூலம் இறைவன் நமக்கு உணர்த்துவது என்ன? - வெள்ளிச் சிந்தனை
September 5, 2025, 7:29 am
நபி (ஸல்) அவர்கள் கூறிய இரண்டு கற்களின் உதாரணம் - வெள்ளிச் சிந்தனை
August 26, 2025, 6:20 pm