நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

உத்தர பிரதேச ரயில் நிலையங்களில் மது விற்பனைக்கு அனுமதி

லக்னோ:

உத்தர பிரதேசத்தில் ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் மது விற்பனைக்கு மாநில பாஜக அரசு அனுமதி அளித்துள்ளது.

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவெடுக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகிலேஷ் யாதவ் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், உத்தர பிரதேசத்தை 1 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தைக் கொண்ட மாநிலமாக மாற்ற பாஜக அரசு ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளது. ரயில் நிலையம், மெட்ரோ ரயில் நிலையம், சொகுசுப் படகுகளில் மதுபானம் விற்பனையை அனுமதிக்க மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

மாநிலத்துக்கு வெளிநாட்டில் இருந்து முதலீடுகள் வருவதாகக் கூறுவது பொய். வருமானம் ஈட்டுவதற்காக மது விற்பனையை பரவலாக்க அரசு முடிவு செய்துள்ளது.

இன்று மதுபானத்தை பரவலாக்கினால், அடுத்ததாக தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் விற்பனையும் அதிகரிக்கும்.

மது விற்பனையை நல்லது என்று நினைத்தால் பாஜக அலுவலகத்தில் வைத்து அதனை நடத்தலாம் என்றார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset