நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

நெகிழி உறிஞ்சி குழாய் (straw) பயன்பாட்டிற்கு தடை

டொரொன்டோ:

கனடாவில் உணவகங்கள் உறிஞ்சி குழாய், நெகிழி உணவுப் பெட்டிகள், நெகிழிப் பைகள், நெகிழிக் கரண்டிகள் ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதில்லை.

நெகிழிப் பொருள் பயன்பாட்டை சட்டரீதியாகத் தடை செய்யமுடியாது என்று அந்நாட்டின் நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்திருந்தது.

எனினும், இத்தடை செயல்படுத்தப்பட்டுள்ளது.

ஒருமுறை பயன்படுத்தப்படும் நெகிழிப் பைகளின் பயன்பாட்டைத் தடை செய்யும் சட்டம் கனடாவில் 2022-ஆம் ஆண்டு அறிமுகமானது.

2030-ஆம் ஆண்டுக்குள் நெகிழிக் கழிவை முற்றிலும் ஒழிப்பது கனடாவின் இலக்கு. அதன்படி கட்டங்கட்டமாக நெகிழிப் பொருள் பயன்பாட்டைத் தடை செய்யும் சட்டம் அறிமுகமானது.

ஆனால், இவ்வாண்டு நவம்பர் மாதம் அத்திட்டத்துக்கு இடையூறு ஏற்பட்டது.

எண்ணெய், இரசாயன நிறுவனங்கள் வழக்கு தொடுத்ததைத் தொடர்ந்து இத்தடை நியாயமற்றதென்றும் அது சட்டரீதியாக செல்லுபடியாகாது என்றும் கனடிய நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்தது.

அந்நாட்டு அரசாங்கம் தடையைச் செயல்படுத்தியிருக்கின்றது.

தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யும் வரை உத்தரவை நிறுத்தி வைக்குமாறு அரசாங்கம் நீதிமன்றத்திடம் கேட்டுக்கொண்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset