நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக கார்கே ஏற்க மறுப்பு

புது டெல்லி:

பாஜகவுக்கு எதிரான 28 கட்சிகள் அடங்கிய  இந்தியா' கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவிக்கப்பட்டார். ஆனால், தேர்தலில் வெற்றிதான் முதன்மையானது என்று கூறி அதை ஏற்க அவர் மறுத்துவிட்டார்.

நாடாளுமன்றத் தேர்தலில் முதலில் வெற்றி பெற்று பெரும்பான்மை பலத்தைப் பெறலாம். பின்னர், ஜனநாயக முறைப்படி பிரதமரை எம்.பி.க்கள் முடிவு செய்வார்கள் என்றார் கார்கே.
முன்னதாக கார்கேவின் பெயரை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கேஜரிவால் ஆகியோர் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் முன்மொழிந்தனர்.

இந்தத் தகவலை மதிமுக பொதுச் செயலர் வைகோ பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தொகுதிப் பங்கீடு:

தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை உடனடியாகத் தொடங்கி இந்த மாத இறுதியில் முடிக்க வேண்டும் என்று கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் வலியுறுத்தியது.

மேலும், காங்கிரஸ் 300 தொகுதிகளில் போட்டியிடலாம், உத்தர பிரதேசத்தில் சமாஜவாதி, தில்லி, பஞ்சாபில் ஆம் ஆத்மி, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் தலைமையில் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் இந்தக் கூட்டத்தில் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது.

நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்படும் அனைத்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களிலும்,விவிபாட் எனப்படும் யாருக்கு வாக்களித்தோம் என்பதைக் காண்பிக்கும் ஒப்புகைச் சீட்டு கருவி பொருத்தப்பட்டு அதில் பதிவாகும் வாக்குச் சீட்டுகளும் எண்ண வேண்டும் என்று இந்தியா கூட்டணியினர் தேர்தல் ஆணையத்தை வலியுறுத்தினர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset