நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

ஞானவாபி மசூதி வழக்கு: முஸ்லிம் தரப்பினரின் மனுக்கள் தள்ளுபடி

பிரயாக்ராஜ்:

உத்தர பிரதேசத்தில் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே உள்ள ஞானவாபி மசூதியில் அகழாய்வு செய்வதற்கு எதிராகமசூதி நிர்வாக குழு மற்றும் உத்தர பிரதேச சன்னி மத்திய வக்ஃபு வாரியம் தொடுத்த மனுக்களை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்தது.

முகலாய மன்னர் ஒளரங்கசீப் உத்தரவின்பேரில், கோயில் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாக கூறி 1991-இல் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இதற்கு எதிராக மாநிலத்தில் உள்ள அலாகாபாத் உயர் நீதிமன்றத்தில் மசூதி நிர்வாக குழு மற்றும் உத்தர பிரதேச சன்னி மத்திய வக்ஃபு வாரியம் மனு தாக்கல் செய்தன.

அதில், 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி இருந்த மத வழிபாட்டுத் தலங்களின் தன்மையை மாற்றுவதற்கு, 1991ம் ஆண்டின் மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தடை விதிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த மனுக்களை நீதிபதி ரோஹித் ரஞ்சன் அகர்வால் விசாரித்து அளித்த உத்தரவில், 1947 அன்று இருந்த மத வழிபாட்டுத் தலங்களின் தன்மையை மாற்றத்தான், 1991ம் ஆண்டின் மத வழிபாட்டுத் தலங்கள் சட்டம் தடை விதிக்கிறது.

ஆனால், அந்தத் தலங்கள் எந்த மதத்தைச் சேர்ந்ததாக இருந்தது என்பதை அறிவதற்கான விளக்கமோ, நடைமுறையோ அச்சட்டத்தில் இல்லை. எனவே மாவட்ட நீதிமன்றத்தில் 32 ஆண்டு காலமாக நிலுவையில் உள்ள ஹிந்துக்களின் மனு விசாரணைக்கு உகந்தது என்று கூறி முஸ்லிம் தரப்பினரின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset