நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிரதமர் மோடியை சந்தித்தார் ஸ்டாலின்: ரூ.12,659 கோடியை நிவாரணமாக கோரினார்

புது டெல்லி:  

பிரதமர் மோடியை தில்லியில் சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், வெள்ள நிவாரண நிதியாக ரூ.12,659 கோடியை வழங்க வலியுறுத்தி மனு அளித்தார்.

மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 3, 4-ம் தேதிகளில் கனமழை பெய்ததால் பெரு வெள்ளம் ஏற்பட்டது.

இதற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்குமாறு பிரதமருக்கு முதல்வர் கடிதம் எழுதினார்.

இந்தநிலையில்,குமரிக்கடலில் உருவான காற்று கீழடுக்கு சுழற்சியால் திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 தென் மாவட்டங்களில் கடந்த 17, 18-ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. இதில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது.

இந்நிலையில், இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்பதற்காக டெல்லி சென்ற முதல்வர் ஸ்டாலின்,  பிரதமர் மோடியை சந்தித்து வெள்ள நிவாரணம் கோரினார்.

தமிழகத்தில் கனமழை, வெள்ளத்தால் வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் அடுத்தடுத்து பாதிக்கப்பட்டிருப்பது குறித்து பிரதமரிடம் முதல்வர் எடுத்துரைத்தார்.

தற்காலிக நிவாரணமாக ரூ.7,033 கோடியும், நிரந்தர நிவாரண தொகையாக ரூ.12,659 கோடியும் விரைந்து வழங்குமாறு கோரிக்கை விடுத்தார்.

பேரிடரால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களுக்கு மட்டும் அவசர நிவாரண நிதியாக ரூ.2,000 கோடியை விரைந்து வழங்குமாறும் பிரதமரை ஸ்டாலின் வலியுறுத்தினார்.

 

தொடர்புடைய செய்திகள்

+ - reset