நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சாங்கி உள்ளிட்ட விமான நிலையங்களில் தங்கம் கடத்தும் பயணிகளுக்கு இந்திய சுங்கத்துறை எச்சரிக்கை!

சிங்கப்பூர் :

தங்க ஆபரணங்களை சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரும் பயணிகளைக் கண்டறியும் நடவடிக்கையில் இந்தியச் சுங்கத்துறை அதிகாரிகள் களமிறங்கியுள்ளனர்.

சில பயணிகள் கட்டணம் பெற்று தங்க ஆபரணங்களை இந்தியாவுக்குக் கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபக் காலமாக இந்தியாவில் தங்கக் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில் மத்திய கிழக்கு, ஆசிய விமான நிலையங்களில் தங்கக் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் பயணிகளைக் கைது செய்யும் நடவடிக்கையில்  இந்தியச் சுங்கத்துறை அதிகாரிகள் ஈடுப்பட்டுள்ளனர்

சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளும் சம்பந்தப்பட்ட நாடுகளில் அடங்கும்.

இந்நாடுகளில் இந்தியாவைவிட தங்கம் மலிவான விலையில் கிடைக்கும்.

இவ்வாண்டு செப்டம்பர் மாதம் ஓமான் தலைநகர் மஸ்கட்டிலிருந்து சென்னைக்குச் சென்ற விமானத்தில் 113 பயணிகள் தங்க ஆபரணங்கள், மின்சாரப் பொருள்கள் ஆகியவற்றைக் கடத்திச் சென்றதாக செய்தி வெளியானது.

பிடிபட்ட பயணிகளிடம் மொத்தம் 13 கிலோகிராம் எடைகொண்ட தங்கம், 200க்கும் அதிகமான கைப்பேசிகள், மடிக்கணினிகள், சிகரெட்டுகள் ஆகியவை இருந்தன.

சாக்லெட், பர்ஃபியூம் போன்றவற்றை வழங்கி இச்செயலில் ஈடுபடுமாறு கடத்தல்காரர்கள் பயணிகளை ஈர்த்திருக்கின்றனர்.

சாங்கி விமான நிலையத்தின் ஒன்றாம் முனையத்திலும் கடத்தல்காரர்கள் வெளிநாட்டு ஊழியர்களை அணுகி வருவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

கடத்தலில் ஈடுபட விரும்புவோர் விமான நிலையத்தில் அமைதியாக இருக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டுக் கடத்தல் நடவடிக்கையில் ஈடுப்படுத்தப்படுகின்றனர்.

இந்தியாவைச் சென்றடைந்தவுடன் கடத்தலில் ஈடுபடும் மற்றொருவர் கடத்தப்பட்ட தங்க ஆபரணத்தைப் பெற்றுக்கொள்வார் என்று சம்பந்தப்பட்ட பயணிக்கு உறுதியளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் 2022ஆம் ஆண்டு மொத்தம் 3,502 கிலோகிராம் எடைகொண்ட தங்கம் 3,982 பேரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாக தி ஹிந்து நாளிதழ் இவ்வாண்டு மார்ச் மாதம் தெரிவித்தது.

2021ஆம் ஆண்டில் 2,445 பேரிடமிருந்து 2,383 கிலோகிராம் தங்கமும் 2020ல் 2,567 பேரிடமிருந்து 2,154 கிலோகிராம் தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset