நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

லண்டனின் கேட்விக் விமான நிலையத்துக்கு இடைவிடா விமானச் சேவை வழங்கத் துவங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் சிங்கப்பூருக்கும் லண்டனின் கேட்விக் (Gatwick) விமான நிலையத்துக்கும் இடைவிடாமல் செல்லும் முதல் விமானச் சேவையைத் தொடங்கவிருக்கிறது.

அந்தச் சேவை அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விமானச் சேவை வாரத்தில் 5 நாள்கள் வழங்கப்படும்.

கேட்விக் விமான நிலையத்திலிருந்து இங்கிலாந்தின் தென் கிழக்குப் பகுதிகளுக்கு வசதியாகச் செல்லலாம்.

இங்கிலாந்தின் மத்தியப் பகுதிக்குச் செல்லவும் அங்கு வசதிகள் உள்ளன.

லண்டனின் ஹீத்ரோ (Heathrow) விமான நிலையத்துக்கு Singapore Airlines நிறுவனம் தற்போது இடைவிடாத விமானச் சேவையை வழங்குகிறது.

மென்செஸ்ட்டர் (Manchester) விமான நிலையத்துக்கும் அத்தகைய சேவை தற்போது உண்டு.

புதிய சேவையோடு சேர்த்து சிங்கப்பூரிலிருந்து இங்கிலாந்தின் பல்வேறு பகுதிகளுக்கு Singapore Airlines ஒவ்வொரு வாரமும் 33 விமானச் சேவையை வழங்குகிறது.

ஆதாரம்: மீடியா கார்ப் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset