நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்; 111 பேர் பலி 

பெய்ஜிங்: 

சீனாவின் கன்சூ பிராந்தியத்தில் 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தினால் இதுவரை 111 பேர் பலியாகியுள்ளதாக அந்நாட்டின் செய்தி ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. 

இந்த நிலநடுக்கம் நேற்றிரவு 11.59 மணியளவில் நிகழ்ந்துள்ளது. நிலநடுக்கத்தினால் அங்குள்ள கடைகள், வீடுகள் மற்றும் சாலை வசதிகள் ஆகியவை முற்றிலுமாக சேதமடைந்ததாக நிலநடுக்கத்தை நேரில் பார்த்த ஒருவர் குறிப்பிட்டார். 

மேலும், சுற்று வட்டாரத்தில் உள்ள சில கிராமங்களிலும் நீர், மின்சாரம் விநியோகங்கள் தடைப்பட்டதாக சொல்லப்படுகிறது 

நிலநடுக்கத்தால் சிக்கி கொண்டிக்கும் மக்களைக் காப்பாற்றும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக சீன நாட்டு அரசாங்கம் தெரிவித்தது.

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் 

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ள வீடியோக்களில் வீடுகளின் சீலிங் பெயர்ந்து விழுந்த நிலையிலும், சேதம் மற்றும் இடிந்துள்ள காட்சிகள் பதிவாகி உள்ளன. மீட்பு பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம்.

நிலநடுக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியதாக Xinhua செய்தி நிறுவனம் கூறியது.

கிராமங்களில் மின்சாரமும் தண்ணீர் விநியோகமும் தடைப்பட்டன.

சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொலிகளில் இடிந்து விழுந்த உட்கூரைகளும் மற்ற இடிபாடுகளும் தெரிகின்றன.

ஆதாரம்: Xinhua

- மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset