நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

உலகின் சிறந்த 100 நகரங்களுக்கான தரவரிசையில் சிங்கப்பூர் 11ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது

சிங்கப்பூர்:

உலகில் இவ்வாண்டு பயணம் செய்வதற்குச் சிறந்த நகரங்களின் தரவரிசையில் சிங்கப்பூர் இடம்பெற்றுள்ளது.

சிறந்த 100 நகரங்களுக்கான தரவரிசையில் சிங்கப்பூர் 11ஆம் இடத்தில் வந்தது.

அது கடந்த ஆண்டு 15ஆம் இடத்தைப் பிடித்திருந்தது.

சிறந்த 10 நகரங்கள்

1. பாரிஸ்
2. துபாய்
3. மட்ரிட்
4. தோக்கியோ
5. ஆம்ஸ்டர்டாம்
6. பெர்லின்
7. ரோம்
8. நியூயார்க்
9. பார்சலோனா
10. லண்டன்

தரவரிசையில் தோக்கியோ, சிங்கப்பூர் ஆகியவற்றுடன் சோல், ஹாங்காங், ஒசாகா ஆகிய ஆசிய நகரங்களும் முதல் 20 இடங்களில் வந்தன.

Euromonitor International எனும் அனைத்துலகச் சந்தை ஆய்வு நிறுவனமும் Lighthouse எனும் தரவு நிறுவனமும் இணைந்து தரவரிசையை வெளியிட்டன.

பயணத்துறை, நீடித்த நிலைத்தன்மை, பொருளியல், சுகாதாரம், பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நகரங்கள் வரிசைப்படுத்தப்பட்டன.

ஆதாரம்: மீடியா கோர்ப் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset