நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

குவைத் மன்னர் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் காலமானர்

குவைத்: 

குவைத் நாட்டின் மன்னர் அமீர் ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா தனது 86 வயதில் காலமானர்.

தனது சகோதரரான ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-சபா மறைவிற்கு பிறகு பொறுப்பேற்று கடந்த மூன்று ஆண்டுகளாக குவைத் நாட்டை வழிநடத்தினார். 

ஷேக் நவாப் அல்-அஹ்மத் மறைவிற்கு பிறகு பட்டத்து இளவரசர், 83 வயதான ஷேக் மிஷால் அல்-அஹ்மத் அல்-சபா, அடுத்த மன்னராக நியமிக்கபட்டார்.

ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் மறைவிற்கு குவைத்தில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், அரசு அலுவலகங்கள் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஷேக் நவாஃப் 2006 இல் பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார். 2020 இல் அமீராக - ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார். 

1937 இல் பிறந்த இவர், குவைத்தின் முன்னாள் ஆட்சியாளர் ஷேக் அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் ஐந்தாவது மகனாவார். 

1990 இல் ஈராக் குவைத்தை ஆக்கிரமித்து, வளைகுடாப் போரின் தொடக்கத்தைத் தூண்டியபோது அவர் பாதுகாப்பு அமைச்சராக இருந்தார், பின்னர் உள்துறை அமைச்சராக பணியாற்றினார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset