நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

போலந்து பிரதமராக டொனால்ட் டஸ்க் பதவியேற்பு

வார்சா:

போலந்து பிரதமராக டொனால்ட் டஸ்க் பதவியேற்றார்.

கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கடந்த 8 ஆண்டுகளாக நாட்டில் ஆட்சி செலுத்தி வந்த பழமைவாதக் கட்சியான லா அண்ட் ஜஸ்டிஸ் கட்சி தோல்வியடைந்தது.

பல்வேறு சிறிய கட்சிகளின் ஆதரவுடன் டொனால்ட் டஸ்க் தலைமையிலான சிவில் ஃபிளாட்ஃபார்ம் கட்சி ஆட்சி அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, தலைநகர் வார்சாவிலுள்ள அதிபர் மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் டொனால்ட் டஸ்கும், பிற அமைச்சர்களும் பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset