நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

காசா போரை நிறுத்த ஐ.நா.வில் இந்தியா ஆதரவு

நியூயார்க்:

காசாவில் போர் மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. பொதுச் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்தீர்மானத்தை இந்தியா உள்பட 153 நாடுகள் ஆதரித்து வாக்களித்தன.

193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையின் சிறப்பு அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தின்போது, காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போரை மனிதாபிமான அடிப்படையில் உடனடியாக நிறுத்த வேண்டும் என எகிப்து சார்பில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது.

வாக்கெடுப்பில் இத்தீர்மானத்துக்கு எதிராக 10 நாடுகள் வாக்களித்தன. 23 நாடுகள் வாக்களிப்பைத் தவிர்த்த நிலையில்,  இந்தியா உள்பட 153 நாடுகள் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தன.

ஆஸ்திரேலியா, இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன. ஜெர்மனி, ஹங்கேரி, இத்தாலி, உக்ரைன், பிரிட்டன் ஆகிய நாடுகள் வாக்களிப்பதைத் தவிர்த்தன.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset