
செய்திகள் இந்தியா
பள்ளிவாசல் பாங்கு ஓசையைவிட கோயில் பஜனைகளில் அதிக சத்தம்: குஜராத் உயர்நீதிமன்றம்
காந்திநகர்:
பள்ளிவாசல்களில் பாங்கு ஓசைக்கு தடை விதிக்கக் கோரிய மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த. மேலும், பள்ளிவாசல்களின் பாங்கு ஓசையைவி விட கோயில்களில் ஒலிபரப்பப்படும் பஜனைகளும், பாடல்களும் தான் அதிக சத்தத்தை எழுப்புகின்றன. அது உங்களுக்கு தொல்லையாக இல்லையா? என்று மனுதாரரிடம் நீதிபதி கேள்வியெழுப்பினார்.
குஜராத் மருத்துவர் தர்மேந்திரா ப்ரஜபதி என்பவர் பள்ளிவாசல்களிலும் நாளொன்றுக்கு 5 பாங்கு ஓசைஒலிப்பெருக்கியில் ஒலிபரப்பப்படுகிறது. அதிக சத்தத்தில் இது ஒலிபரப்பப்படுவதால் ஒலி மாசு ஏற்படுகிறது. இதற்கு தடை விதிக்க வேண்டும் என வழக்குத் தொடுத்தார்.
இந்தமனுவை விசாரித்த பெண் நீதிபதி சுனிதா அகர்வால், நீங்கள் ஒரு மருத்துவர். ஒலி மாசு என்ற வார்த்தையையும் பயன்படுத்தி இருக்கிறீர்கள்.
அப்படியென்றால், அதற்கான ஆதாரம் எங்கே? ஒலி மாசை ஏற்படுத்துவதற்கு எவ்வளவு டெசிபல் ஒலி வேண்டும் என்பதையும்,பாங்கு எத்தனை டெசிபலில் ஒலிபரப்பப்படுகிறது என்பதையும் நீங்கள் தெரிவித்திருக்க வேண்டாமா?
கோயில்களில் ஒலிபரப்பப்படும் பாடல்களும், பஜனைகளும் வெறும் அந்தக் கோயில் வளாகத்திற்குள் மட்டும் தான் கேட்கிறதா? அது யாருக்கும் அதிக சத்தமாக தெரிவதில்லையா?
பள்ளிவாசல்களில் தொழுகை ஒலிபரப்பப்படுவது நீண்டகாலமாக இருந்து வரும் ஒரு சடங்கு. மேலும், வெறும் 5 முதல் 10 நிமிடத்திற்குள் மட்டுமே இது ஒலிபரப்பப்படுகிறது. இதனால் ஒலி மாசு ஏற்படும் என்ற மனுதாரரின் வாதம் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை என நீதிபதி உத்தரவில் தெரிவித்தனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 9, 2025, 4:16 am
பாகிஸ்தானிலிருந்து ஏவப்பட்ட 8 ஏவுகணைகளை இந்திய இராணுவம் விண்ணில் அழித்தது
May 8, 2025, 5:14 pm
ஏர் இந்தியா இந்திய ராணுவ வீரர்களுக்குச் சிறப்பு சலுகையை அறிவித்தது
May 8, 2025, 6:57 am
சிந்தூர் நடவடிக்கைக்கு பல்வேறு மாநில முதல்வர்கள், கட்சி தலைவர்கள் வாழ்த்து
May 7, 2025, 11:13 am
இந்திய முப்படை தளபதிகளுடன் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை
May 7, 2025, 10:35 am
ஆபரேஷன் சிந்தூர் எதிரொலியால் வட இந்தியாவில் விமான சேவைகள் பாதிப்பு
May 2, 2025, 5:01 pm