
செய்திகள் இந்தியா
பாறையில் கசிந்த நீரை பருகி உயிர்வாழ்ந்த உத்தரகண்ட் தொழிலாளர்கள்: எலி வளை முறையில் துளையிட்டு காப்பாற்றிய முஹம்மது குறைஷி அணி
புது டெல்லி:
உத்தரகண்ட் சுரங்கப் பாதையில் சிக்கியபோது பாறைகளில் கசிந்த நீர்த் துளிகளைப் பருகி ஆரம்ப நாள்களில் உயிர் பிழைத்ததாக உயிர்தப்பியவர்கள் தெரிவித்தனர்.
உத்தரகண்டின் உத்தரகாசி மாவட்டத்தில் சில்க்யாரா சுரங்கப் பாதையில் நவம்பர் 12ம் தேதி நிலச்சரிவு ஏற்பட்டதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
17 நாள் மரணப் போராட்ட அனுபவங்களை தப்பிய ஜார்க்கண்ட் மாநிலத் தொழிலாளி அனில் பேடியா தெரிவிக்கையில், நிலச்சரிவு ஏற்பட்டதும் நாங்கள் அனைவரும் சுரங்கத்துக்குள் புதைந்துவிடுவோம் என்று எண்ணினோம். முதல் இரண்டு நாள்களில் நாங்கள் எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டோம்.
70 மணி நேரத்துக்குப் பிறகு அதிகாரிகள் எங்களைத் தொடர்புகொண்ட பிறகே, விரக்தியை மறந்து உயிர் வாழும் நம்பிக்கை பிறந்தது. தாகம் தீர்க்க பாறைகளிலிருந்து கசிந்த நீர்த் துளிகளைப் பருகியும், அரிசிப் பொரியை சாப்பிட்டும் உயிர் பிழைத்தோம்.
வாழைப்பழம், ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு போன்ற பழங்கள், தண்ணீர் பாட்டில்களுடன் சாதம், பருப்பு மற்றும் சப்பாத்தி போன்ற வழக்கமான உணவுகள் கிடைத்தன. இறுதியாக, கடவுள் எங்களுக்குச் செவிசாய்த்தார் என்றார்.
எலி வளை முறையில் துளையிட்டு 41 பேரை காப்பாற்றிய குறித்து சுரங்கப் பணியாளர் முஹம்மது குரேஷி கூறுகையில், இடிபாடுகளின் கடைசிப் பகுதியை நாங்கள் துளையிட்டுக் கொண்டிருந்தபோது, தொழிலாளர்கள் எங்களின் குரலைக் கேட்க முடிந்தது. துளையிடும் பணிகள் முடிந்ததும், என்னை தோளில் தூக்கிக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த மீட்புப் பணியில் ஈடுபட பணம் எதுவும் பெறமாட்டோம் என முன்னரே தெரிவித்துவிட்டோம். இதுபோன்ற வரலாற்று மீட்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்' என்றார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2025, 1:50 pm
டெல்லியில் பிரிட்டன் பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: 2 பேர் கைது
March 11, 2025, 10:01 am
கேரளாவில் யூடியூப் காணொலி பார்த்து டயட் செய்த இளம் பெண் உயிரிழப்பு
March 11, 2025, 9:56 am
சமஸ்கிருதம்தான் தமிழைவிட பழைமையானது: பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே
March 10, 2025, 1:23 pm
சென்னையில் ஓடுபாதையில் விமானத்தில் தீப்பொறி உருவானது: நூலிழையில் உயிர் தப்பிய 194 பயணிகள்
March 9, 2025, 9:55 pm
இஸ்ரேல் சுற்றுலா பயணி உட்பட 2 பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை: கர்நாடகாவில் பயங்கரம்
March 9, 2025, 2:30 pm
கர்நாடகா வரவுச் செலவு திட்டத்தில் சிறுபான்மையினருக்குப் பல சலுகைகள் அறிவிப்பு
March 7, 2025, 12:14 pm