
செய்திகள் தமிழ் தொடர்புகள்
சென்னையில் கொட்டும் கனமழை: இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
சென்னை:
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய மழை கொட்டிக் கொண்டிருக்கிறது.
சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.
இரவு நேரத்தில் பெய்த தொடர் கனமழையின் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.
காற்றழுத்த தாழ்வுப் பகுதி:
இலங்கையை ஒட்டியுள்ள பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று தொடர்ந்து அதே பகுதியில் நிலவுகிறது . இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து வியாழக்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறக்கூடும், என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
மேலும், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
சென்னையில் தொடர் கனமழை:
சென்னையிலும் அதன் புறநகர்ப் பகுதிகளிலும் புதன்கிழமை காலை முதல் விட்டுவிட்டு கனமழை பெய்தது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
மேலும், நேற்று இரவு நேரத்தில் பெய்த கனமழையின் காரணமாக, பணி முடிந்து வீடு திரும்பும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர். சென்னையின் புறநகர் பகுதிகளிலும் காலை முதலே கனமழை வெளுத்து வாங்கியது.
சென்னையில் ராயபுரம், பழைய வண்ணாரப்பேட்டை, வியாசர்பாடி, பெரம்பூர், தாம்பரம், குரோம்பேட்டை, வடபழனி, அசோக்நகர், கிண்டி,தி.நகர், மீனம்பாக்கம், கோயம்பேடு, அண்ணாநகர், எழும்பூர், சென்ட்ரல் ரயில் நிலையம், பாரிமுனை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை:
சென்னையில் புதன்கிழமை தொடர் கனமழை பெய்து வந்த நிலையில், இன்று (நவ.30) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தொடர் மழையின் காரணமாக, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 14, 2025, 4:15 pm
அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும்: அமீத் ஷா கருத்தை மறுத்து இபிஎஸ்
July 14, 2025, 6:56 am
சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் ஜூலை 16, 17-ஆம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு
July 13, 2025, 9:31 am
பாமக தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்: உங்கள் எதிர்காலமும், நிகழ்காலமும் நான்
July 12, 2025, 8:05 pm
இனி பள்ளிகளில் கடைசி பெஞ்ச் கிடையாது: தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு
July 12, 2025, 7:39 pm
நாளை வைரமுத்துவின் வள்ளுவர் மறை உரைநூல் வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
July 10, 2025, 5:07 pm
படகுகளில் தவெக பெயர் இருந்தால் மீனவர்களுக்கு மானியம் தர மறுப்பதா?: விஜய் கண்டனம்
July 10, 2025, 12:23 pm