நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

2028ஆம் ஆண்டுக்கான சுக்மா போட்டியில் ஷாரியா சட்டத்தை உட்படுத்திய ஆடை முறை:  ஹன்னா இயோ விளக்கம் 

கோலாலம்பூர்: 

2028ஆம் ஆண்டுக்கான சுக்மா விளையாட்டு போட்டி கிளாந்தான் மாநிலத்தில் நடைபெறவுள்ளது. இந்த சுக்மா போட்டியில் ஷாரியா சட்டத்தை உட்படுத்திய ஆடை நடைமுறை தொடர்பாக இளைஞர் விளையாட்டு துறை அமைச்சு மாநில அரசாங்கத்திடம் கலந்தாலோசனை நடத்த தயாராக உள்ளதாக அமைச்சர் ஹன்னா இயோ கூறினார். 

தற்போது அடுத்தாண்டு சரவாக் மாநிலத்தில் நடைபெறும் சுக்மா போட்டியை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்படும் என்று அவர் சொன்னார். 

கிளாந்தான் மாநிலத்தில் நடைபெறும் சுக்மா போட்டி தொடர்பான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களின் பரிந்துரைகள் இன்னும் கிடைக்கப்படவில்லை.  எதுவாக இருந்தாலும் அமைச்சு அளவில் நடைபெறும் கூட்டத்திற்குப் பிறகே முடிவு அறிவிக்கப்படும் என்று ஹன்னா இயோ விளக்கம் அளித்தார். 

முன்னதாக, 2028ஆம் ஆண்டுக்கான சுக்மா விளையாட்டு போட்டியில் ஷாரியா சட்டத்தை உட்படுத்திய ஆடை கட்டுப்பாடு அமல்படுத்தப்படும் என்று மாநில அரசாங்கம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset