நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இந்திய கப்பல் படையைச் சேர்ந்த 8 பேரின் மரண தண்டனை: மனுவை விசாரணைக்கு ஏற்றது கத்தார்

புது டெல்லி: 

கத்தாரில் தங்கி இருந்து இஸ்ரேல் நாட்டுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்திய முன்னாள் கடற்படை அதிகாரிகளின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்கப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கத்தார் ராணுவத்துக்குப் பயிற்சியையும் பிற சேவைகளையும் அளித்து வரும் அல் தாரா என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய 8 இந்தியர்கள், அந்த நாட்டின் கடற்படை திட்டங்களை இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டனர்.

இந்த 8 பேருக்கும் மரண தண்டனை விதித்து கத்தார் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பு குறித்து அறிந்த இந்தியா அதிர்ச்சியை வெளிப்படுத்தியது. 

இந்தியர்களின் மரண தண்டனை தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை கத்தார் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன. அதனை கத்தார் நீதித்துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset