நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

சொகுசுக் கடிகாரங்களையும் பெனடால் மாத்திரைகளையும் அனுப்பிய வெளியுறவு அமைச்சின் தலைமை இயக்குநர் மீது குற்றச்சாட்டு

சிங்கப்பூர்:

சிங்கப்பூரில், வெளியுறவு அமைச்சின் தலைமை இயக்குநர் கில்பெர்ட் ஒ ஹின் குவான் (Gilbert Oh Hin Kwan) மீது  அஞ்சல் பொதிகளில் Panadol மாத்திரைகளையும் சொகுசுக் கடிகாரங்களையும் அனுப்பி வைத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இன்று (23 நவம்பர்) 44 வயது கில்பெர்ட் மீது மொத்தம் 3 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு கூறியது.

சென்ற ஆண்டு (2022) டிசம்பர் மாதம் அவர், Panadol மாத்திரைகள் அடங்கிய பெட்டிகளை சிங்கப்பூரிலிருந்து பெய்ச்சிங்கிற்கு அனுப்பி வைத்திருக்கிறார்.

அப்போது சளி, காய்ச்சல் மாத்திரைகளுக்குச் சீனாவில் தட்டுப்பாடு நிலவி வந்தது.

தனிப்பட்ட முறையில் தெரிந்தவருக்கு அந்தப் பெட்டிகளை அனுப்புவதை, வெளியுறவு அமைச்சிடம் அவர் மறைத்திருக்கிறார்.

அதற்குப் பதிலாக வெளியுறவு அமைச்சில் பணிபுரியும் சக ஊழியருக்கு அந்தப் பெட்டிகளை அனுப்புவதாக அவர்  கூறியிருக்கிறார்.

அந்த அடிப்படையில் அரசதந்திர அஞ்சல் பொதிகளின் வழி அந்தப் பெட்டிகள் அனுப்பப்பட்டதாகப் பிரிவு சொன்னது.

அதிகாரபூர்வப் பயன்பாட்டுக்கு மட்டுமே அரசதந்திர அஞ்சல் பொதிகளைப் பயன்படுத்த முடியும்.

சொகுசுக் கடிகாரங்களை சீனாவிலிருந்து சிங்கப்பூருக்கு அனுப்பும்படி கில்பெர்ட் ஒ ஹின் குவான் தம்முடைய சக ஊழியரிடம் கேட்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வாண்டு (2023) ஜனவரி மாதம் 12ஆம் தேதி அந்தக் குற்றம் நேர்ந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்குப் பிறகு அந்த அஞ்சல் பொதியில் சொகுசுக் கடிகாரங்கள் இருப்பதாகவும் அவை தம்முடைய அப்பாவிற்குச் சொந்தமானவை என்றும் ஒ வெளியுறவு அமைச்சின் தலைமை செயலாளரிடம் பொய்யுரைத்ததாகக் கருதப்படுகிறது.

ஆதாரம்: CNA

தொடர்புடைய செய்திகள்

+ - reset