நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

நேஷனல் ஹெரால்டின் ரூ.752 கோடி சொத்துகள் முடக்கம்

புது டெல்லி: 

காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்படும் நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்குச் சொந்தமான ரூ.752 கோடியிலான அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியது.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர், மிஸோரம் ஆகிய 5 மாநில தேர்தல்கள் நடைபெற்று வரும் நிலையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன் 1937இல் ஜவஹர்லால் நேருவால் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை நடத்தப்பட்டு வந்தது.

நேஷனல் ஹெரால்டு ரூ.90.21 கோடி இருந்த கடனை அடைக்க காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் யங் இந்தியா நிறுவனம் வாங்கியது.

காங்கிரஸ் கட்சியின் பணத்தைப் பயன்படுத்தி நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் பல கோடி சொத்துகள் அபகரிக்கப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்குத் தொடுத்தார்.

அமலாக்கத் துறை கடந்த ஆண்டு வழக்கு பதிவு செய்து, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, தற்போதைய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரிடம் விசாரணை நடத்தியது.

இந்நிலையில், நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தின் ரூ.751.9 கோடியிலான அசையா சொத்துகளை முடக்குவதற்கான அறிவிக்கையை அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.

இதுகுறித்து காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், 5 மாநிலத் தேர்தல் தோல்வி பயத்தால் இந்த நடவடிக்கையை பாஜக மேற்கொண்டுள்ளது.

பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு காங்கிரஸ் அஞ்சாது.  

பணப் பரிவர்த்தனையே நடைபெறாத இந்த விவகாரத்தில் சொத்துகள் முடக்கப்படுவதற்கு, இந்த நிறுவனத்தில் காங்கிரஸ் கட்சிக்கு தொடர்பு உள்ளதே காரணம்' என்று அவர் தெரிவித்தார்.

- ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset