நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழா: ரஜினி, கமல், இளையராஜா பங்கேற்பு 

சென்னை: 

கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பில் கலைஞர் 100 என்ற பெயரில் பிரமாண்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 

எதிர்வரும் டிசம்பர் 24ஆம் தேதி சென்னையிலுள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்த்திரையுலக முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், மற்றும் இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் கலந்துக்கொள்ளவிருக்கின்றனர். 

மேலும், பல முன்னணி நடிகர்கள், நடிகைகளுக்கும் அழைப்புகள் வழங்கப்பட்டு வருவதாக தமிழ் திரையுலகத்தின் சங்கத்தினர் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். 

இந்த விழாவினை திரை நட்சத்திரங்களும் திரை கலைஞர்களும் பங்கெடுத்து சிறப்பிக்கவிருப்பதால் டிசம்பர் 23 மற்றும் டிசம்பர் 24ஆம் தேதிகலில் படப்பிடிப்புகள் நடைபெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

+ - reset