நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

ஈப்போவில் மீண்டும் விஜய் சேதுபதி - ரசிகர்கள் குவிந்தனர் 

ஈப்போ:

பேரா மாநிலத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 51 ஆவது தமிழ் சினிமா படத்தின்  படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியது.

பேரா மாநிலத்தில் இன்னும் பெரிடப்படாத இப்படப்பிற் கான பூஜை இவ்வாண்டு ஜூன் மாதம் ஈப்போவில்  உள்ள கல்லுமலை ஸ்ரீ சுப்பிரமணியர் ஆலயத்தில் நடைபெற்றது.

ஒரு மாதம் இடை விடாது பேரா மாநிலத்தில் படபடிப்பு பணி ஒரு மாதம் காலம் நடைபெற்றது.

அதன் பின்னர் தமிழகம் சென்ற விஜய் சேதுபதி படப்பிடிப்பு குழுவினர்கள் நேற்று மீண்டும் வந்து அதன் படபிடிப்பு தொடங்கப்பட்டது.

May be an image of 10 people, people smiling and crowd

நேற்று அதன் படபிடிப்பு ஈப்போ, பெர்ச்சாம் எனும் இடத்தில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நடைபெற்றது.

நேற்று விஜய் சேதுபதியின் திருமண நாளை முன்னிட்டு ஈப்போ வணிகப் பிரமுகர் டத்தோ அமாலுடின் குடும்பத்தினர்கள் மற்றும் படபிடிப்பு குழுவினர்கள் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

விஜய்  சேதுபதி பின்னணி நடிகராகப் பணிபுரிந்து தனது திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். மேலும் சீனு ராமசாமியின் தென்மேற்குப் பருவக்காற்று (2010) திரைப்படத்தில் தனது முதல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு முன்பு சிறு துணை வேடங்களில் நடித்தார். 

2012 இல், அவர் சுந்தரபாண்டியன்  (2012), பீட்சா (2012) மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் (2012) ஆகிய திரைப்படங்களில் விமர்சன மற்றும் வணிகரீதியான வெற்றிகளுடன் பெரும் புகழைப் பெற்றார்.

 சூது கவ்வும் (2013), இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா  (2013), பண்ணையாரும் பத்மினியும்  (2014), காதலும் கடந்து போகும்  (2016), செக்க சிவந்த வானம்  (2018), பேட்டா (2019), சூப்பர் டீலக்ஸ் (2019), விக்ரம் (2022), மற்றும் ஜவான் (2023).ஆகிய படங்களில் நடித்து முன்னணி நடகராக திகழும் விஜய் சேதுபதி பேரா மாநிலத்தில் தயாராகும் அவரின் 51 ஆவது படம் நிச்சயம் வெற்றி காணும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset