நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

அல் ஷிபா மருத்துவமனையில் இஸ்ரேலிய படைகள் முற்றுகை

காசா :

ஹமாஸ் போராளிகளைக் குறிவைத்து காசா தீபகற்பத்திலுள்ள அல் ஷிபா மருத்துவமனையை இஸ்ரேலிய இராணுவம் முற்றுகையிட்டுள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் முற்றுகையிட்டுள்ள இஸ்ரேலிய இராணுவம்  ஹமாஸ் போராளிகளைச் சரணடையுமாறு அறிவுறுத்தியுள்ளது என்று காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

உளவுத் தகவல்கள், தேவையின் அடிப்படையில் அல் ஷிபா மருத்துவமனையில் உள்ள சில இடங்களை இலக்காக கொண்டு ஹமாஸ் போராளிகளுக்கு எதிரான துல்லியத் தாக்குதலைத் தாங்கள் மேற்கொண்டு வருவதாக இஸ்ரேலிய தற்காப்பு அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

மேலும், மருத்துவமனை வளாகத்தில்  பொதுமக்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படாமலிருப்பதை உறுதி செய்வதற்காக மருத்துவக் குழுவினர் அரபு மொழி பெயர்ப்பாளர்களுடன் தற்காப்பு அமைச்சின் படையினர் சிறப்பு பயிற்சியை மேற்கொண்டுள்ளனர் என்று அது குறிப்பிட்டது

முன்னதாக, அம்மருத்துவமனையின் கீழ்த்தளத்தில் ஹமாஸ் படையினர் கட்டுப்பாட்டு மையத்தைக் கொண்டிருப்பதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியிருந்தது.

பிணைக்கைதிகளைத் தடுத்து வைப்பதற்கும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அந்த மருத்துவமனையையும் சுரங்கப் பாதையையும் ஹமாஸ் படையினர் பயன்படுத்தி வருவதாக அது கூறியது.

இஸ்ரேலின் இந்தக் கூற்றை ஹமாஸ் மறுத்துள்ள நிலையில்,  இஸ்ரேல் கூறுவதில் உண்மை உள்ளது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

- அஸ்வினி செந்தாமரை

தொடர்புடைய செய்திகள்

+ - reset