நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

களத்தில் நிற்கும் இந்தோனேசியாவின் அதிபர் வேட்பாளர்கள்

ஜகார்தா:

இந்தோனேசியத் தேர்தல் ஆணையம் அதிபர் வேட்பாளர்கள் மூவரின் பெயர்களை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

இந்தோனேசிய அதிபர் தேர்தல் அடுத்த ஆண்டு 2024 பிப்ரவரியில் நடைபெறவிருக்கிறது.

அதிபர் வேட்பாளர்களாக - தற்காப்பு அமைச்சர் பிரபோவோ சுபியாண்ட்டோ (Prabowo Subianto), முன்னாள் மத்திய ஜாவா ஆளுநர் கஞ்சார் பிரனோவோ (Ganjar Pranowo), முன்னைய ஜக்கார்த்தா ஆளுநர் அனீஸ் பஸ்வேடான் (Anies Baswedan) ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அவர்களோடு சேர்ந்து துணையதிபர் பதவிக்குப் போட்டியிடவிருப்போரின் பெயர்களும் இன்று அறிவிக்கப்பட்டன.

அனைவரும் தேர்தலில் நிற்பதற்குத் தேவையான அனைத்து நிபந்தனைகளையும் நிறைவுசெய்து, தகுதிபெற்றுள்ளனர்.

சுபியாண்ட்டோ கருத்துக் கணிப்புகளில் முன்னணி வகிக்கிறார்.

அவருடன் சேர்ந்து துணையதிபராகப் போட்டியிடவிருப்பவர் தற்போதைய அதிபர் ஜோக்கோ விடோடோவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset