நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

டிக்டாக் தடை செய்த நாடுகளின் பட்டியலில் நேபாளமும் இணைந்தது 

காட்மாண்டு:

டிக்டாக் சமூக ஊடகத்தை ஒவ்வொரு நாடாக தடை செய்துவரும் வேளையில் நேப்பாள நாடும் Tiktok காணொலித் தளத்தைத் தடை செய்யவுள்ளது.

டிக்டாக் தளத்தால் நாட்டின் சமூக நல்லிணக்கத்துக்கு ஆபத்து ஏற்படுவதாக அதிகாரிகள் கூறினர்.

சேவையின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த கோரிக்கைகள் அதிகரிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

செயலியை முடக்கும்படி இணையச் சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

நேப்பாளத்தில் கடந்த 4 ஆண்டுகளில் Tiktok-இன் தொடர்பில் 1,600க்கும் அதிகமான குற்றச்செயல்கள் பதிவாகியுள்ளன.

Tiktok-யைக் கட்டுப்படுத்தும் நாடுகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

ஆப்கானிஸ்தான், இந்தியா போன்ற நாடுகளில் Tiktok தளம் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலந்து போன்ற நாடுகளும் டிக்டாக் தளத்தை தடை செய்துள்ளன. பல நாடுகளில் அரசாங்க ஊழியர்கள் தளத்தைப் பயன்படுத்த அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- ஃபிதா 

தொடர்புடைய செய்திகள்

+ - reset