நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

பறிமுதல் செய்த சொத்துகளை நவாஸிடம் ஒப்படைக்க பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு

இஸ்லாமாபாத்:

ஊழல் வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை அவரிடமே ஒப்படைக்க இஸ்லாமாபாதிலுள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

பரிசுப் பொருள் முறைகேடு தொடர்பாக நவாஸுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முகமது பஷீர் நவாஸ் ஷெரீஃபிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஒப்படைக்க உத்தரவிட்டார்.

பனாமா ஆவண முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தால் கடந்த 2017ம் ஆண்டு நவாஸ் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

நவாஸ் ஷெரீஃபுக்கு ஊழல் தடுப்பு நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. அவர் அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.  பின்னர் மேல் சிகிச்சைக்காக லண்டன் சென்றார்.

இந்தச் சூழலில், சுமார் 4 ஆண்டுகளுக்குப் பிறகு நவாஸ் ஷெரீஃப் கடந்த மாதம் நாடு திரும்பினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset