நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் உலகம்

By
|
பகிர்

மருத்துவமனை, பள்ளிகளை குறிவைத்து தொடர்ந்து தாக்கும் இஸ்ரேல்

காசா சிட்டி:

காசாவிலுள்ள மருத்துவமனைகள், பள்ளிகள் மீது இஸ்ரேல் படையினர் குறிவைத்து ஏவுகணைகளை வீசி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாக அந்தப் பகுதி அதிகாரிகள் குற்றம் சாட்டினர்.

காசா சிட்டியில் அமைந்துள்ள மிகப் பெரிய மருத்துவமனையான அல்ஷிஃபாவில் நடத்தப்பட்ட குண்டுவீச்சில் 13 பேரும், பள்ளியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 50 பேரும் கொல்லப்பட்டனர்.

இது குறித்து அல்ஷிஃபா மருத்துவமனை இயக்குநர் முகமது அபு சல்மியா கூறுகையில், அல்ஷிஃபா மருத்துமனை வளாகத்துக்குள் வெள்ளிக்கிழமை இஸ்ரேல் குண்டுவீச்சு நடத்தியது. 13 பேர் இந்தத் தாக்குதலில் உயிரிழந்தனர்.

இது தவிர, காசா சிட்டியிலுள்ள பள்ளி வளாகம் ஒன்றிலும் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில் 50 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உடல்கள் அல் ஷிஃபா மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டன என்றார் அவர்.

காசா சிட்டியிலுள்ள மற்றொரு மருத்துவமனையான அல்காத் மருத்துவமனையில், இஸ்ரேலிய ஸ்னைப்பர்கள் நுழைந்துள்ளதாக சர்வதேச செம்பிறைச் சங்கம் கூறியுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset