செய்திகள் சிந்தனைகள்
வந்த ஊரும் சொந்த ஊரும்! - வெள்ளிச் சிந்தனை
இனம் புரியாத எதிர்பார்ப்பை எப்போதுமே தருவது சொந்த ஊர் பயணம். பெருநாள்களுக்கு சொந்த ஊருக் குப் பயணப்படுபவர்களுக்கு இது நல்லாவே புரியும்.
எந்த ஊரிலும் வசதியா வாழ்ந்து விடலாம். ஆனால், சொந்த ஊரில் மட்டுமே நிம்மதியாக வாழமுடியும்.
சொந்த ஊரில் இருந்து கொண்டு காலையில் 09 மணிக்கு வேலைக்குச் சென்று, மாலையில் 06 மணிக்கு வீடு திரும்ப வாய்ப்புக் கிடைத்தவர் 'பறக்கத்' என்ற நற்பேறு பெற்றவர்.
ஒரு மாதம் சொந்த ஊரை விட்டு வெளியூரில் தங்கி வேலை செய்து பாருங்கள். மூன்று வேளை ஒழுங்காக சாப்பிடமுடியாது; வீட்டில் ஒரு விசேசத்துக்கு போக முடியாது.
ஒரே நாள்தான் லீவு கொடுப்பாய்ங்க! அதுல வீட்டுக்குப் போகவே ஒருநாள் ஆயிடும்!! அப்படி இப்படி செலவ மிச்சப் படுத்தி கடைசியில ரூ 6000 தான் வீட்டுக்கு அனுப்ப முடியும்.
அப்போ புரியும்... சொந்த ஊருல... சொந்த பந்தம்... தெரு பசங்களோட இருப்பது எவ்வளவு சுகமான வாழ்க்கைனு.
...ஆனாலும் நடப்பு நிலை என்ன தெரியுமா?
வெளிநாட்டில் இருப்பவனுக்கு சொந்த நாடு போக ஆசை.
சொந்த நாட்டில் இருப்பவனுக்கு சொந்த ஊர் போக ஆசை.
ஆனால், சொந்த ஊரில் இருப்பவன் கடவுச் சீட்டுக்கு விண்ணப்பித்து நாள்களை எண்ணிக் கொண்டிருக் கிறான்! இருக்கும் இடத்தில் சாதிக்கும் எண்ணம் ஏன் இன்னும் ஏற்படவில்லை?
நபி (ஸல்) அவர்கள் தாம் பிறந்த மக்கா நகரை - கஃபத் துல்லாஹ் - இறையாலயத்தை அதிகம் நேசிப்பவர் களாகவே இருந்துள்ளார்கள்.
மக்காவைப் பிரிந்து மதீனாவுக்குப் புறப்படும்போது நபியவர்கள் மொழிந்த சோகவார்த்தை என்ன தெரியுமா?
'மக்காவே! என்னளவில் மிகப் பிரியமானதும் மகிழ்வு தருவதுமான ஓர் உன்னதமான ஊர், உன்னைத் தவிர வேறு எதுவுமில்லை.
உறுதியாக நீ அல்லாஹ்வின் பூமியில் மிகச்சிறந்த புண்ணிய பூமி. அல்லாஹ்வின் பூமியில் எனக்கோர் உவப்பான பூமி.
இறைவன் மீதாணை! எனது கூட்டத்தார் மட்டும் என்னை இங்கிருந்து வெளியேற்றாதிருந்தால், நான் இங்கிருந்து வெளியேறி இருக்கமாட்டேன்.
... இறுதியாக இரண்டு செய்திகள் :
• செய்தி ஒன்று : சொந்த மண்ணின் அந்த மக்களின் வலியை அறிந்திடாத உணர்ந்திடாத உலக & மார்க்கக் கல்வியும் ஊனம்தான்.
அதாவது...சொந்த ஊரைப் பற்றி சிந்திக்காத, அதன் வளர்ச்சிக்காக முன்னேற்றத்துக்காக பாடுபடாதோர்...
மிகப்பெரிய கல்விமான்களாக, செல்வச் சீமான்களாக, வாட்டசாட்டமான இளைஞர்களாக இருந்தாலும் ஊனமானவர்களே!
• செய்தி இரண்டு : சுவனமே என்றாலும் சொந்த ஊர் போல ஆகுமா? என்ற ஒரு சொலவடை உண்டு! அந்த வகையில் முஃமின் - இறைநம்பிக்கையாளர்களாகிய நமக்கு இந்த பூமி வந்த ஊர். சுவனமே நமது சொந்த ஊர்.
அந்த சொந்த ஊருக்காக உழைப்போம்; அமல் செய்வோம்;
முயற்சி செய்வோம் வாருங்கள், இன்ஷா அல்லாஹ்...!
- கே. ரஹ்மதுல்லாஹ் மஹ்ளரீ
தொடர்புடைய செய்திகள்
November 15, 2024, 7:44 am
வேஷம் என்பது... - வெள்ளிச் சிந்தனை
November 8, 2024, 7:21 am
உலகம் சோதனைக் களம்: இங்கு கூலியை எதிர்பார்க்கக் கூடாது - வெள்ளிச் சிந்தனை
November 1, 2024, 9:31 am
நல்லவற்றையே பேசுங்கள் - வெள்ளிச் சிந்தனை
October 25, 2024, 1:14 am
சகோதர தாத்பர்யம் எப்படி இருக்க வேண்டும்? - வெள்ளிச் சிந்தனை
October 18, 2024, 8:09 am
அன்பு மகனே...! - வெள்ளிச் சிந்தனை
October 11, 2024, 8:35 am
நாம் நாமாக இருப்போம் - வெள்ளிச் சிந்தனை
September 20, 2024, 9:33 am
எதை விடுவது? - வெள்ளிச் சிந்தனை
September 16, 2024, 8:45 am
நபி பிறந்தார்..எங்கள் நபி பிறந்தார்..! - மீலாது சிறப்புக் கட்டுரை
September 13, 2024, 8:11 am
ஆணுக்கும் கற்புண்டு - வெள்ளிச் சிந்தனை
September 11, 2024, 7:57 am