நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் இந்தியா

By
|
பகிர்

பிரதமர் மோடியுடன் இஸ்ரேல் பிரதமர் பேச்சு: துணை நிற்பதாக மீண்டும் உறுதியளித்த மோடி 

புது டெல்லி: 

இஸ்ரேல் நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இந்திய பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது, இஸ்ரேலுக்கு இந்திய மக்கள் உறுதியாக துணை நிற்பர் என்று மோடி மீண்டும் உறுதியளித்தார்.

காஸா பகுதியில் இருந்து ஹமாஸ் படையினர் இஸ்ரேல் மீது சனிக்கிழமை தாக்குதல் நடத்தினர். இதற்கு இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் இருதரப்பிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, இத்தாலி, ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டன. அதில் ஹமாஸ் படையினரின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், 5 நாடுகளும் இஸ்ரேலுக்கு துணை நிற்பதாகத் தெரிவித்தன.

இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடியும், இஸ்ரேலுடன் இந்தியா துணை நிற்பதாக மீண்டும் உறுதி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ஆதரவுக்கு இஸ்ரேல் நன்றி தெரிவித்துள்ளது.

இதனிடையே,  பாலஸ்தீன பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் இந்தியா முக்கியப் பங்கு வகிக்க வேண்டும் என இந்தியாவுக்கான பாலஸ்தீன தூதர் அட்னான் அபு அல் ஹைஜா வலியுறுத்தினார்.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

+ - reset